கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன?
____________________.
2)இராக்காலத்தில் இயேசுவிடத்தில் வந்த நிக்கொதேமு ஒரு ________________.
3)பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போகும்போது நேரம் என்ன?
____________________.
4) உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தரிடத்தில் எத்தனை நாட்கள் இருந்தது?
____________________.
5)வானத்திலிருந்து தேவதூதன் தோன்றி யாரைப் பலப்படுத்தினான்?
____________________.
நேற்றைய விடைகள்:
1)வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு.23:27)
2)ராமாத்லேகி (நியாயாதிபதிகள்.15:17)
3)தூரா சமபூமி (தானியேல்.3:1)
4)இரக்கங்களுக்கு (புலம்பல்.3:22)
5) ஏசாயா
(ஏசாயா.1:1)
Comments
Post a Comment