கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : மாற்கு சுவிசேஷம்
1. சீஷர்கள் எந்த நாளில் கதிர்களை கொய்ய தொடங்கினார்கள்?
2. எதை இல்லை என்று சாதிக்கின்ற சதுசேயர்?
3. யாருடைய வீட்டில் இயேசுவானவர் ஆயக்காரர் மற்றும் பாவிகளோடும்கூட பந்தி இருந்தார்?
4. இயேசு சுகம் ஆக்கியது யவீருவின் ________________.
5. மாற்கு எழுதிய சுவிசேஷத்தில் சொல்லப்படும் முதல் தீர்க்கதரிசி யார்?
6. வாசிக்கிறவன் சிந்திக்க கடவன் அது நிற்க தகாத இடத்தில் நீங்கள் அதை நிற்க காணும் போது யூதேயாவில் இருக்கிறவர்கள் எங்கு ஓடிப்போக கடவர்கள்?
7. இயேசுவைக் கைது செய்தபோது யாருடைய காது வெட்டப்பட்டது?
8. எந்த பாவத்தினை இயேசுவானவர் மன்னிக்க முடியாத குற்றம் என சொன்னார்?
9. இயேசுவும் சீடர்களும் ஒலிவ மலைக்கு புறப்பட்டுப் போகும் முன்பு என்ன செய்தார்கள்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/fqBxT2ZVogr3qNPT7
நேற்றைய சரியான விடைகள்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்
(விரைவில் பட்டியலிடப்படும்
WILL BE UPDATED SHORTLY...)



Comments
Post a Comment