கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
https://forms.gle/Qo6YWr6nMhonnFyY8
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தை நம் வாழ்வில் காண கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி தோத்திரம்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தை நம் வாழ்வில் காண கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி தோத்திரம்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. தேவனுடைய மந்தையை உற்சாக மனதுடன் கண்காணிப்பு செய்யுங்கள் என்றது யார்?
2. இரக்கம் செய்கிறவன் உற்சாகமாய் செய்யவேண்டும் என்றது யார்?
3. தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையில் திரும்பப் போடவேண்டும் என்றது யார்?
4. பேதுருவை உன் பட்டயத்தை திரும்ப அதன் உறையில் போடு என்றது யார்?
5. உறையோடு தன் பட்டயத்தை இடுப்பண்டை வைத்திருந்தது யார்?
6. உறையில் இருந்த பட்டயத்தை உருவி பெலிஸ்தியனை கொன்றது யார்?
7. கிறிஸ்துவாகிய உலக இரட்சகரை குறித்து எங்கு வாசிக்கிறோம்?
8. குமாரனாகிய உலக இரட்சகரை குறித்து எங்கு வாசிக்கிறோம்?
9. எந்த மரத்தை பற்றிய உவமையை இயேசு சொன்னார்?
10. எந்த தோட்டத்தைப் பற்றிய உவமையை இயேசு சொன்னார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்

Comments
Post a Comment