கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரூத்
1. போவாஸ் யார்?
2. யாருடைய வயலில் ரூத் கதிர்களை பொருக்கினாள்?
3. போவாஸ் அறுக்கிறவர்களை பார்த்து என்ன கூறினான்?
4. போவாஸ் ரூத்தைப் பார்த்து என்ன சொன்னான்?
5. தன் வேலைக்காரருக்கு என்ன கட்டளையிட்டிருப்பதாக போவாஸ் ரூத்திடம் சொன்னான்?
6. சாப்பாடு வேளையில் தன் உணவை ரூத் எங்கு சாப்பிட்டாள்?
7. கதிர் பொருக்கிக்கொள்ள ரூத் எழுந்த போது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி என்ன கூறினான்?
8. ரூத் தான் பொறுக்கிய கதிர்கள் தட்டி அடித்து தீர்த்தபோது அது எத்தனை மரக்கால் கொண்டது?
9. இரண்டு மோவாபிய மருமகள்கள் கொண்ட இஸ்ரேல் பெண்மணி யார்?
10. நகோமி தன் மருமகளிடம் போவாஸின் களத்திற்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்று கற்பித்தாள்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.நியாயாதிபதிகள், நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று.
ரூத் 1:1
2.யூதாவிலுள்ள பெத்லகேம்
ரூத் 1:1
3.எலிமெலேக்கு,
ரூத் 1:2
4.மக்லோன், கிலியோன்.
ரூத் 1:2
5.மோவாபியர்
ரூத் 1:4
6.ஒர்பாள், ரூத்.
ரூத் 1:4
7.பத்துவருஷம்
ரூத் 1:4
8.மிகுந்த கசப்பு
ரூத் 1:20
9.வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில்
ரூத் 1:22
10. தன் புருஷனும் , பிள்ளைகளும் இறந்தபடியினால்
ரூத் 1:5
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment