Skip to main content

வேத வினா விடை -126 (28.07.2020)


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.

முக்கியமான குறிப்புகள்:

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : ரூத்

1. விடியற்காலை மட்டும் ரூத் எங்கே படுத்துக் கொண்டிருந்தாள்?

2. போவாஸ் பாதி ராத்திரியில் எதனால் அரண்டு போனான்?

3. யார் பிறகே போகாததினால் உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது என்று போவாஸ் கூறினான்?

4. இப்போதும் மகளே, நீ பயப்படாதே,உனக்கு வேண்டியதெல்லாம்
செய்வேன். நீ___________ என்பதை என் ஜனமாகிய ஊரெல்லாம் அறிவார்கள்.

5. இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் எது?

6. போவாஸ் எப்படிபட்டவன்?

7. யாருடைய மனைவியை போவாஸ் மணந்து கொண்டான்?

8. போவாஸ் எந்த வம்சத்தை சார்ந்தவன்?

9. போவாஸ் ரூத்தை யாரை சாட்சியாக வைத்து மனைவியாக்கிக்கொண்டான்?

10. உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல் ஆகக்கடவது  என்று யாருக்கு சொல்லப்பட்டது? 

விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:

நேற்றைய சரியான விடைகள்:


1.நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். 
ரூத் 2:1
2.எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடைய
வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே போய் கதிர்களை பொறுக்கினாள்.
ரூத் 2:3
3.போவாஸ் அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக. 
ரூத் 2:4
4.போவாஸ் ரூத்தைப் பார்த்து: மகளே, கேள். பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு. 
ரூத் 2:8
5.ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்.
ரூத் 2:9
6.அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்து சாப்பிட்டாள். 
ரூத் 2:14
7.அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ஈனம்பண்ணவேண்டாம்அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். 
ரூத் 2:15,16
8.ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது. 
ரூத் 2:17
9.நகோமி
ரூத்1;3, 4
10.அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். 
நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ. அந்த மனுஷன் புசித்தக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு. 
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள். அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். 
ரூத் 3:2,3,4


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...