கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோனா
1. நினிவே பட்டணத்திற்கு விரோதமாக பிரசங்கிக்க கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டானது?
2. யோனா எந்த இனத்தை சார்ந்தவன்?
3. அமித்தாயின் குமாரன் யார்?
4. கர்த்தருடைய வார்த்தைக்கு விலகி யோனா நினிவே பட்டணத்திற்கு பதில் எந்த இடத்திற்கு ஓடிப்போகும்படி கப்பல் ஏறினான்?
5. கர்த்தர் சமுத்திரத்தின் மேல் ___________ வரவிட்டார். அதினாலே கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெருங்கொந்தளிப்பு உண்டாயிற்று.
6. கடலில் பெருங்கொந்தளிப்பு உண்டானபோது யோனா என்ன செய்து கொண்டிருந்தான்?
7. யோனாவை சமுத்திரத்திலே போட்டு விடும்படி ஆலோசனை தந்தது யார்?
8. மீனின் வயிற்றில் யோனா எத்தனை நாட்கள் இருந்தான்?
9. தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினபோது யோனா எங்கே இருந்தான்?
10. பொய்யின் மாயையைப் பற்றிக் கொள்ளுகிறவர்கள் எதைப் போக்கடிப்பதாக யோனா கூறினான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
ரூத் 4:11
2.இஸ்ரவேலிலே
ரூத் 4:14
3.நகோமி
ரூத் 4:16
4.ஈசாய்
ரூத் 4:22
5.வயல்நிலத்தின் பங்கை
ரூத் 4:3
6.ஆறுபடி
ரூத் 3:17
7. மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு,
ரூத் 4:5
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment