Skip to main content

வேத வினா விடை -130 (01.08.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.

மீண்டும் ஒரு புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்!

முக்கியமான குறிப்புகள்: 

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி :  யோனா

1. நினிவே ஜனங்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டு திரும்பியதால் தேவன் மனஸ்தாபப்பட்டு தான் அவர்களுக்கு சொன்ன தீங்கை செய்யாத இருந்தார் என்பதை அறிந்தவுடன் யோனா என்ன செய்தான்?

2. யோனாவின் தலையின் மேல் நிழல் உண்டாகி இருக்க தேவன் எந்த தாவரத்தை முளைத்த பண்ணினார்?

3.  யோனா நினிவே நகரத்துக்கு கிழக்கே குடிசை போட்டு உட்கார்ந்தால் மறுநாள் தேவன் எந்த நேரத்தில் ஒரு பூச்சியை கட்டளையிட்டார்?

4. மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு தேவனை நோக்கி உரத்த சத்தமாய் கூப்பிடவும், அவரவர் தம்தம் ___________________ வழியையும் தம் தம் கைகளில் உள்ள கொடுமையையும் விட்டு திரும்ப கடவர்கள் என்று ராஜா கட்டளையிட்டான்.

5. தேவன் எப்படிப்பட்டவர் என்று யோனா கூறினான்?

6. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு ஆ கர்த்தாவே இந்த மனுஷருடைய ______________  எங்களை அழித்து போடாதேயும்.

7.  என் நெருக்கத்திலே நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார் நான் பாதாளத்தில் ______________ கூக்குரலிட்டேன்.  நீர் என் சத்தத்தைக் கேட்டேன்.

8.  தான் எப்பொழுது கர்த்தரை நினைத்ததாக யோனா கூறினான்?

9. தான் எப்படி பலியிட போவதாக யோனா கூறினான்?

10. இப்போதும் கர்த்தாவே என் _____________ என்னை விட்டு எடுத்துக்கொள்ளும் நான் உயிரோடு இருக்கிறதைப்  பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாய் இருக்கும் என்றான்.

11. ஆமணக்குச் செடியை அரித்துப் போட்டது
எது?

12. அதற்குக் கர்த்தர் நீ____________  நீ வளர்க்காத்தும் ஒரு ராத்திரியிலே முளைத்ததும் ஒரு ராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காக பரிதபிக்கிறாயே.

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:


நேற்றைய சரியான விடைகள்:

1.கரையிலே கக்கிவிட்டது. 
யோனா 2:10
2.நினிவே
யோனா 3:2
3.விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது 
யோனா 3:3
4.மூன்றுநாள் 
யோனா 3:3
5.ஒருநாள் 
யோனா 3:4
6.தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள். 
யோனா 3:5
7.தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். 
யோனா 3:6
8.சீட்டுப்போட்டார்கள். 
யோனா 1:7
9.உஷ்ணமான கீழ் காற்றை கட்டளையிட்டார்
யோனா 4:8
10.இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான 
யோனா 4:11

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:

அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்





Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...