கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்!
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : பிலிப்பியர்
1. இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் , தீமோத்தேயும் பிலிப்பு பட்டணத்தில் யார் யாருக்கு கடிதம் எழுதினார்கள்?
2. பிலிப்பியர் அதிகாரத்தில் சபை அங்கத்தினர்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள்?
3. பிலிப்பு பட்டணத்தாரை நினைக்கும் போதெல்லாம் தேவனை ஸ்தோத்தரிப்பதாக பவுல் ஏன் கூறினார்?
4. எப்படிப்பட்ட அன்பிலே எல்லார்மேலும் வாஞ்சையாயிருப்பதாக பவுல் கூறினார்?
5. பிலிப்பியரை கண்டாலும், அவர்களிடம் வராமலிருந்தாலும், எதற்கு பாத்திரமாக நடந்து கொள்ளும்படி பவுல் கூறுகிறார்?
6. சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன் கொண்டு ____________ திருவசனத்தை சொல்லும்படி அதிகமாய் துணிந்திருக்கிறார்கள்.
7. பிலிப்பியர் கிறிஸ்துவின் நாளுக்கென்று எப்படி இருக்க வேண்டுமென பவுல் வேண்டுதல் செய்கிறார்?
8. நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ______________ இது தேவனுடைய செயலே.
9. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதை _________________ பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார்.
10. இயேசு கிறிஸ்து பிதாவுக்கு எந்த மட்டும் கீழ்ப்படிந்தார்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.கடுங்கோபங் கொண்டு,
கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
யோனா 4:1-2
2.ஆமணக்குச் செடி
யோனா 4:6
3.கிழக்கு வெளுக்கும் நேரத்தில்
யோனா 4:7
4.பொல்லாத
யோனா 3:8
5.நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
யோனா 4:2
6.ஜீவனிமித்தம்
யோனா 1:14
7.வயிற்றிலிருந்து
யோனா 2:2
8.என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில்
யோனா 2:7
9.துதியின் சத்தத்தோடே
யோனா 2:9
10.பிராணனை
யோனா 4:3
11.ஒரு பூச்சி
யோனா 4:7
12.பிரயாசப்படாததும்,
யோனா 4:10
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment