கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : பிலிப்பியர்
1. இரட்சிப்பு நிறைவேற எப்படி பிரயாசப்பட வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
2. நான் வீணாக ஓடினதும், வீணாக பிரயாசைப் பட்டதுமில்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் உண்டாய் இருப்பதற்கு எல்லாவற்றையும் எப்படி செய்ய வேண்டும் என பவுல் பிலிப்பியர்களிடம் கூறுகிறார்?
3. ஏனெனில் தேவனே தம்முடைய _________________ விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்.
4. நாவுகள் யாவும் எதை அறிக்கை பண்ணும்?
5. பிலிப்பியரின் காரியங்களை விசாரிப்பதற்கு தன்னைப்போல் மனதுள்ளவன் யார் என்று பவுல் கூறுகிறார்?
6. திமோத்தேயு சுவிசேஷத்தின் நிமித்தம் பவுலுக்கு எதைப்போல் ஊழியம் செய்தார்?
7. தன் குறைச்சலில் உதவி செய்தவனும், உடன் சேவகனும், கிறிஸ்துவின் ஊழியத்தின் நிமித்தம் மரணத்திற்கு சமீபமாய் இருந்தவனும் யார் என்று பவுல் கூறுகிறார்?
8. எழுதினதையே எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை என்று பவுல் ஏன் கூறுகிறார்?
9. அப்போஸ்தலர் பவுல் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்?
10. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எதன் மேல் நம்பிக்கை வைத்தார்கள்?
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்
1.கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதினது.
பிலிப்பியர் 1:1
2.பரிசுத்தவான்கள், சகோதரர்கள்.பிலிப்பியர் 1:1,1:12
3. சுவிசேஷம் அறிவிக்கப்பட் நாள் முதல் கொண்டு இதுவரையிலும் இந்த ஐக்கியத்தில் உடன்பட்டவர்களானதால்.பிலிப்பியர் 1:3
4.இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே
பிலிப்பியர் 1:8
5. கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு பாத்திரராக
பிலிப்பியர் 1:27
6. பயமில்லாமல்
பிலிப்பியர் 1:14
7. துப்பரவானவர்கள் இடறலற்றவர்கள்
பிலிப்பியர் 1:11
8. அத்தாட்சியாயிருக்கிறது.
பிலிப்பியர் 1:28
9.கொள்ளையாடின பிலிப்பியர் 2:6
10.சிலுவையின் மரணபரியந்தமும்
பிலிப்பியர் 2:8
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment