கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : பிலிப்பியர்
1. நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி
குற்றம் சாட்டப்படாத பரிசேயன் யார்?
2. இயேசு கிறிஸ்துவை அறிந்தபின்பு பவுல் தனக்கு லாபமாயிருந்தவைகளை என்னவாக எண்ணினான்?
3. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பான பந்தயப் பொருளுக்காக___________ நோக்கித் தொடர்கிறேன்.
4. நம்முடைய குடியிருப்பு எங்கே இருக்கிறது?
5. கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர்களின் முடிவென்ன?
6. பிலிப்பியர் சபையிலே ஒரு சிந்தையாயிராத இரண்டு பேர் யார் யார்?
7.எந்த ஒரு நூல் நூலகத்திலோ அல்லது உலகின் கடையாந்தரத்திலிருந்தும் கிடைக்காது?
8. அப்போஸ்தலர் பவுல் சகோதரரை எப்படி அழைக்கிறார்?
9. விண்ணப்பங்களையும் , வேண்டுதல்களையும் தேவனுக்கு எப்படி தெரியப்படுத்த வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
10. உங்கள் ____________ எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக கர்த்தர் சமீபமாயிருக்கிறார்?
11. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு என்று எழுதியவர் யார்?
12. தான் எவ்வாறு போதிக்கப்பட்டிருப்பதாக பவுல் கூறுகிறார்?
13. கொடுக்கல் வாங்கல் காரியத்தில் பவுலுக்கு உடன்பட்டவர்கள் யார்?
14. பவுல் எங்கிருந்தபோது அவர் குறைச்சலை நீக்கும்படகயாக இரண்டொரு தரம் அவரது தேவைகள் அனுப்பப்பட்டது?
15. அவர் எல்லாவற்றையும் தமக்கு கீழ்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே நம்முடைய ___________ சரீரத்தை தம்முடைய ___________ சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்
1.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்
பிலிப்பியர் 2:12
2.முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும்
பிலிப்பியர் 2:16
3.தயவுள்ள சித்தத்தின்படி
பிலிப்பியர் 2:13
4.இயேசுகிறிஸ்து கர்த்தரென்று
பிலிப்பியர் 2:11
5.தீமோத்தேயு
பிலிப்பியர் 2:19-20
6.தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல
பிலிப்பியர் 2:22
7.எப்பாப்பிரோதீத்து
பிலிப்பியர் 2:25,30
8. எழுதப்பட்டவைகள் எழுதப்பட்டவர்களுக்கு நலமாயிருக்கும்படியாக
பிலிப்பியர் 3:1
9.பென்யமீன் கோத்திரத்தான்,
பிலிப்பியர் 3:5
10.மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல் , ஆவியினால் தேவனுக்கு ஆராதனை செய்து இயேசு கிறிஸ்துவின் மேல்
பிலிப்பியர் 3:3
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment