கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
2. உடையைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
3. தன்னுடையவைகளுக்காக கவலைப்படுவது எது?
4. உடைக்காகக் கவலைப்படாதது எது?
5. வீண் வார்த்தைகளை ஜெபத்தில் அலப்புவது யார்?
6. அதிக வசனிப்பினால் ஜெபத்தில் அலப்புவது யார்?
7. யாரை சிநேகிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது?
8. யாரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது?
9. யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?
10. யாருக்கு ஜெபம் பண்ணவேண்டும்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.இஸ்ரவேல் தேசத்துக் குடிகளோடே
ஓசியா 4:1
யூதாவோடும்
ஓசியா 12:2
2.எப்பிராயீம்
ஓசியா 7:8
3.எப்பிராயீமே- சோரம்போனது இஸ்ரவேல்- தீட்டுப்பட்டது
ஓசியா 5:3
4.நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார், நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
ஓசியா 6:1
5.வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
ஓசியா 4:11
6.ஒரு அறுப்புக் காலம்
ஓசியா 6:11
7.அடங்காத கிடாரியைப்போல்
ஓசியா 4:16
8.அறிவில்லாமையினால்
ஓசியா 4:6
9.காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது.
ஓசியா 6:4
10.உண்மையும் இரக்கமும் , தேவனைப்பற்றிய அறிவும்
ஓசியா 4:1
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment