கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களும் தோத்திரங்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருந்தவன் யார்?
2. சந்தோஷமாய் தன் வழியே புறப்பட்டு போனவர் யார்?
3. பவுலை வாயில் அடியுங்கள் என்று சொன்ன பிரதான ஆசாரியன் யார்?
4. நியாயாசனத்துக்கு முன்பாக அடிபட்ட ஜெபாலயத் தலைவன் யார்?
5. கிறிஸ்துவின் சீஷர்களை ஜெப ஆலயங்களில் வைத்து அடித்தவன் யார்?
6. யாருடைய வீடு ஜெப ஆலயத்துக்கு அடுத்தாயிருந்தது?
7. கனம் பொருந்திய ஒரு புருஷன் யார்?
8. தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட இரண்டு அப்போஸ்தலர்கள் யார் யார்?
9. முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சி யார்?
10. அப்போஸ்தலர்களில் முதல் இரத்த சாட்சி யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:8,15
2.பிலிப்பு
அப்போஸ்தலர் 8:40
3.பவுலும் பர்னபாவும்
அப்போஸ்தலர் 15:35
4.அகபு
அப்போஸ்தலர் 11:28
5.தீமோத்தேயு அப்போஸ்தலர் 16:1
6.அனனியா மனைவி சப்பீராள்
அப்போஸ்தலர் 5:1
7. அப்போஸ்தலனாகிய பவுல்
8.பவுல் பர்னபாவை நோக்கி;
அப்போஸ்தலர் 15:36 - 39
9.ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:8,13
10.லீதியாள்
அப்போஸ்தலர் 16:14
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment