கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. "மகா தேவி" இவள் யார்?
2. புதிய ஏற்பாட்டில் நீதிமான்களாயிருந்த மூன்று புருஷர் யார் யார்?
3. மெத்தையிலிருந்து விழுந்து செத்து உயிர் பெற்றவன் யார்?
4. விக்கிரங்களால் நிறைந்த ஒரு பட்டணம் எது?
5. அரங்க சாலைக்குள் இழுத்துக் கொண்டு போகப்பட்டவர்கள் யார்?
6. தீரு பட்டிணத்தில் ஏழு நாள் தங்கியிருந்தவர்கள் யார்?
7. அப்போஸ்தலனாகிய பவுலையும் அவரோடிருந்தவர்களையும் ஏழு நாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக் கொண்டவர்கள் யார்?
8. நற்குணசாலிகளாய் இருந்தவர்கள் யார்?
9. "நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா" என்றது யார்?
10. நான் மூன்றெழுத்துக்களுடையோன் , நான் துடித்தேன் மீனுமல்ல, நான் கொதிப்பேன் சோறுமல்ல , நான் எரிபந்தமானேன் நெருப்புமல்ல... நான் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.மாய வித்தைக்காரனாகிய சீமோன்
அப்போஸ்தலர் 8:18,23
2. எத்தியோப்பிய மந்திரி
அப்போஸ்தலர் 8:39
3.அனனியா
அப்போஸ்தலர் 23:2
4.சொஸ்தேனே
அப்போஸ்தலர் 18:17
5.சவுல்
அப்போஸ்தலர் 22:13,19
6.யுஸ்து
அப்போஸ்தலர் 18:7
7.பேலிக்ஸ்
அப்போஸ்தலர் 23:26
8.பர்னபா பவுல்
அப்போஸ்தலர் 14:14
9.ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:59
10.யாக்கோபு
அப்போஸ்தலர் 12:5
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment