கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. லீஸ்திராவில் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாயிருந்தது, ஒரு போதும் நடவாமல் கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்தவனை குணமாக்கினது யார்?
2. நீ எழுந்து உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றது யார்?
3. நான் இரண்டெழுத்துடையோன்; ஒரு அரசனுக்கு படுக்கையுமானேன்; ஒரு மன்னன் சாவதற்கும் கூட நான் தான் காரணம்; நாங்கள் மனிதரைத் தின்போம். நான் யார்?
4. நான் மூன்றெழுத்துடையோன், உருவில் சிறிதாயினும் உண்மை விளம்பி நான்.... என்னால் புதிய அப்போஸ்தலன் சேர்க்கப்பட்டான் நான் யார்?
5. சீப்புரு தீவின் கள்ளத் தீர்க்கதரிசி யார்?
6. வெள்ளையடிக்கப்பட்ட சுவர் அது யார்?
7. எனக்கு சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் - யார்?
8. சீட்டின் மூலம் அப்போஸ்தலனானவன் யார்?
9. கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் தேவன் வாசம்பண்ணுகிறதில்லை என்று சொன்னவர்கள் யார்?
10. நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள் என்றது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.பேதுரு
அப்போஸ்தலர் 10:48
2.சீமோன்
அப்போஸ்தலர் 8:13, 21-23
3.சிறைச்சாலைக்காரன் குடும்பத்தார்
அப்போஸ்தலர் 16:27, 33
4.சிறைச்சாலைக்காரன்
அப்போஸ்தலர் 16:27, 33
5.தாமரி
அப்போஸ்தலர் 17:34
6.லீதியாள்
அப்போஸ்தலர் 16:14
7.ஐனிக்கேயாள்
அப்போஸ்தலர் 16:12
8.ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர்
அப்போஸ்தலர் 19:14
9.பேதுரு
அப்போஸ்தலர் 3:6
10.பேதுரு
அப்போஸ்தலர் 9:34
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment