கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. "அவன் முகம் தேவதூதன் முகம் போலிருக்கக் கண்டார்கள்" அவன் யார்?
2. தன் மாமனை இரட்சித்த மருமகன் யார்?
3. ஸ்தேவானை அடக்கம் பண்ணினது யார்?
4. "நீ பிதற்றுகிறாய்" என்று சொல்லப்பட்டவன் யார்?
5. நீ பிதற்றுகிறாய்" என்று சொல்லப்பட்டவள் யார்?
6. உயிரோடு பரலோகம் சென்ற மூவர் யார்?
7. நற்கிரியைகளையும், தருமங்களையும் மிகுதியாய் செய்து வந்த ஒரு ஸ்திரீ யார்?
8. ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்து வந்த ஒரு புருஷன் யார்?
9. தோல் பதனிடுகிறவனாயிருந்தவன் யார்?
10. "இந்த வாயாடி" இவர் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.பவுல்
அப்போஸ்தலர் 14:8-10
2.பேதுரு
அப்போஸ்தலர் 9:34
3.புழு
அப்போஸ்தலர் 12:23
4.சீட்டு
அப்போஸ்தலர் 1:15,26
5.பர்யேசு
அப்போஸ்தலர் 13:6
6.பிரதான ஆசாரியனாகிய அனனியா
அப்போஸ்தலர் 23:2, 3
7.ஈசாயின் குமாரனாகிய தாவீது
அப்போஸ்தலர் 13:22
8.மத்தியா
அப்போஸ்தலர் 1:26
9. ஸ்தேவான் , அப்போஸ்தலர் பவுல்
அப்போஸ்தலர் 7:47-48, 17:22,24
10.பேதுரு
அப்போஸ்தலர் 3:12, 20
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment