கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
கடந்த 150 நாட்களாக இந்த வேத வினா விடையை நடத்த கிருபை செய்த கடவுளுக்கு நன்றி. இதிலே உற்சாகமாக பங்கேற்று வருகின்ற உங்கள் அனைவருக்கும் நன்றி!
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று சத்தமிட்டவர்கள் யார்?
2. ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு விலையுள்ள புஸ்தகங்களை எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தவர்கள் யார்?
3. பேதுரு, பவுல் இவர்களால் மரித்தபின் உயிரோடு எழுப்பப்ட்டவர்கள் யார்? யார்?
4. தன் புருஷனண்டையில் அடக்கம்பண்ணப்பட்ட ஸ்திரீ யார்?
5. நாங்கள் வானத்திலுமுண்டு, எங்களுக்கு ராஜ்யமும் உண்டு.... நாங்கள் இயேசுவையும் அறிவோம் உங்களையும் அறிவோம்- நாங்கள் யார்?
6. தன் குமாரர்களை நியாதிபதிகளாக வைத்தவன் யார்?
7. சிறைச்சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவன் யார்?
8. சிறைச்சாலையில் இரும்புக் கதவு தானாய் திறவண்டது எப்போது?
9.பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலையில் அடைத்தவன் யார்?
10. அகாயா நாட்டு அதிபதியின் பெயரென்ன?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:8,15
2. பவுலின் சகோதிரியின் மகன் 23:12-35
3.தேவபக்தியுள்ள மனிதர்கள்
அப்போஸ்தலர் 8:2
4.பவுல்
அப்போஸ்தலர் 26:24
5.ரோதை
அப்போஸ்தலர் 12:13, 15
6.ஏனோக்கு ஆதி5:24
எலியா 2இராஜா2:11
இயேசு அப்போ 1:9
அப்போஸ்தலர் 1:9-11
7. கிரேக்கப் பாஷையில் தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள்
அப்போஸ்தலர் 9:36
8. கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:1-2
9.சீமோன்
அப்போஸ்தலர் 9:43
10. பவுல்
அப்போஸ்தலர் 17:16
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment