கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. இராத்தரிசனத்தில் மக்கெதொனியா தேசத்தானை கண்டது யார்?
2. கடுங்கோபம் கொண்டவர்கள் யார்?
3. "இவன் தேவன்" என்றவர்கள் யார்?
4. தேவனுடைய இருதயத்துக்கேற்றவனாய் இருந்தவன் யார்?
5. "தேவனை தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம்" என சொல்ல நேர்ந்த சம்பவம் எது?
6. பொய்சாட்சிகளையும் நிறுத்தினார்கள்" எந்த சந்தர்பத்தில் இப்படி செய்தார்கள்?
7. "ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும்" இது எந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்பட கேள்வி ?
8. "இந்த மனுஷன் கொலை பாதகன்,இதற்கு சந்தேகமில்லை" இப்படிச் சொல்ல நேர்ந்த சம்பவம் என்ன?
9. "கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது" எந்த சந்தர்ப்பத்தில்?
10. கூடாரம் செய்கிற தொழிலாளிகளாயிருந்தவர்கள் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
நேற்றைய சரியான விடைகள்:
1. செர்கியு பவுல்: அப்:13:7-12
2. புபிலியுவினுடய தகப்பன் :28:8
3. பெந்தகோஸ்தே என்னும் நாளில் : 1:14,15 : 2: 1- 4
4. யாக்கோபின் குடும்பத்தார்: யாத் :1:1-5, ஆதி 46:27
5. அனனியா :22:12
6. பவுல் :22:3
7. அப்: 17:9 ல்
8. மோளேகு 7:43
9. தியானாளே : 19:28
10. பேதுரு : 20:26
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment