கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. முதல் முதல் "கிறிஸ்தவர்கள்" என்ற பெயரால் அழைக்கப்பட்டவர்கள் யார்?
2. நான் கிறிஸ்தவனாகிறதற்கு நீ என்னை சம்மதிக்கப்பண்ணணுகிறாய் என்று சொன்னவன் யார்?
3. யூரோகிலிதோன் என்றால் என்ன?
4. வேத வாக்கியங்களை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்தவர்கள் யார்?
5. கடுங்கோபம் மூண்டபடியினால் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்த அப்போஸ்தலர்கள் யார்?
6. அடிபட்ட ஜெப ஆலயத் தலைவன் யார்?
7. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்த ஜெபாலயத் தலைவன் யார்?
8. சகோதரராலே நற்சாட்சி பெற்ற ஒரு சீஷன் யார்?
9. சகல யூதராலும் நல்லவனென்று சாட்சி பெற்ற இருவர் யார்? யார்?
10. "நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற் போயிற்று" என வாசிப்பதெங்கே?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. தெயுதாஸ் 5:36
2. யூதாஸ் :5:37
3. பெஸ்து : 26:24
4. பவுல் :27:34
5. சவுல்(பவுல்) 9:5
6. ஏறக்குறைய 120 பேர் :1:15, 2: 1 - 4
7. அகிரிப்பா, பெர்னீக்கேயாள், :25:23
8. பேலிக்ஸ், துருசில்லா, 24:24
9. பேதுரு, யோவான் : 3:1
10. கிரேத்தா தீவிற்க்கு அருகில் :27:13,14
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment