கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. உங்கள் பிதாக்களைப் போல் நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள் என்றது யார்?
2. திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியத்தை சொல்லுகிறேன் என்று சொன்னது யார்?
3. இடைவிடாமல் அவனவனுக்கு புத்தி சொல்லிக் கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள் என்றவர் யார்?
4. கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினவர்கள் யார்?
5. நீ உன் துர்குணத்தை விட்டு மனந்ததிரும்பி தேவனை நோக்கி வேண்டிக்கொள் என்று சொன்னது யார்?
6. வெளிச்சத்தைக் கண்டு பயமடைந்தவர்கள் யார்?
7. நியாயாசனத்துக்கு முன்பாக அடிக்கப்பட்ட ஜெபாலயத்தலைவன் யார்?
8. பரிசுத்த ஆவியால் பிசாசு துரத்தப்படுவதைப் பார்த்து சுயமாய் பிசாசு துரத்த முற்பட்ட பொல்லாத ஆவியால் காயப்பட்டது யார்?
9. யாருடைய முகத்தை இனி காணமாட்டோமென்று கழுத்தை கட்டிக்கொண்டு முத்தம் செய்து மிகவும் அழுது வழியனுப்பிய பட்டணத்தார் யார்?
10. பேதுருவின் பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.சீமோன்
அப்போஸ்தலர் 9:43, 10:32
2.பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே
அப்போஸ்தலர் 4:36
3.பேலிக்ஸ்
அப்போஸ்தலர் 24:24-26
4.பெஸ்து
அப்போஸ்தலர் 25:1-9
5.பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே
அப்போஸ்தலர் 4:36-37
6.அனனியா
அப்போஸ்தலர் 5:1-4
7.சப்பீராள்
அப்போஸ்தலர் 5:1-10
8.சப்பீராள்
அப்போஸ்தலர் 5:10
9. அத்தேனே பட்டணத்தார்
அப்போஸ்தலர் 17:20
10.அப்போஸ்தலர் 26:23
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment