கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தை சுமந்தது யார்?
2. அநேக நாள்களாய் சூரியனையாவது நட்சத்திரங்களையாவது காணாது தவித்தவர்கள் யார்?
3. விடிந்தால் கொலை செய்யப்படுவோம் என்று அறிந்தும் சிறைச்சாலையில் கவலையின்றி உறங்கினது யார்?
4. கண் கெட்ட பின் புசியாமலும் குடியாமலும் மூன்று நாள் ஜெபித்தது யார்?
5. பொழுது விடியுமட்டும் காத்திராமல் இராத்திரியிலேயே ஞானஸ்நானம் கொடுத்த அப்போஸ்தலன் யார்?
6. சுய இரத்தத்தினால் சம்பாதித்துக் கொண்டது எது?
7. தேவ வரத்தை பணத்தினால் சம்பாதிக்க நினைத்தது யார்?
8. பகலிலே ஒன்பதாம் மணி நேரத்திலே பிரத்தியட்சமான தரிசனம் கண்டது யார்?
9. தமஸ்குவில் தரிசனம் பெற்றவனும் அப்போஸ்தலரில் பிரதானமானவனான ஒருவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவும் ஜெபித்தான், ஜெபித்தது யார்? அந்த அப்போஸ்தலர் யார்?
10. ஆதிரியாக் கடலில் அலைவுபட்டது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:51
2.பவுல்
அப்போஸ்தலர் 27:21-22
3.பவுல்
அப்போஸ்தலர் 20:31
4.புறஜாதியார்
அப்போஸ்தலர் 13:48
5.பேதுரு
அப்போஸ்தலர் 8:22
6.சவுலோடு கூட இருந்தவர்கள்
அப்போஸ்தலர் 22:9
7.சொஸ்தேனே
அப்போஸ்தலர்18:17
8.பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் யூதனுடைய குமாரர் ஏழு பேர்.
அப்போஸ்தலர் 19:13-16
9.பவுல்
அப்போஸ்தலர் 20:38
10 சப்பீராள்
அப்போஸ்தலர் 5:10
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment