கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களும் தோத்திரங்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரோமர்
1. இது விசுவாசிகளின் சரீரத்தில் ஆளுகை செய்யக்கூடாது____________.
2. இது தன்னை கொன்றது என்கிறார் பவுல் __________.
3. இது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாய் இருக்கிறது __________.
4. இது நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ள தேவை ___________.
5. இது நித்திய ஜீவன் என்பதின் எதிர்மறையானச் சொல் ______.
6. இது கர்த்தருடையது மட்டுமே ________.
7. இது புதுமையானது ___________.
8.இது இரட்சிப்புக்குத் தேவை______.
9. இது வாக்குத்தத்தம் அவமாகாமலிருக்க தேவையானது_________.
10. இது குற்றங்களை நீக்கி தீர்ப்பு வழங்க ஏதுவானது__________.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே
ரோமர் 2:13
2.நம்பிக்கையிலே
ரோமர் 12:12
3.தேவமகிமையை அடைவோமென்கிற
நம்பிக்கையினாலேயும்
உபத்திரவங்களிலேயும்
ரோமர் 5:2,4
4.உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது
ரோமர் 5:3
5.சமாதானம்
ரோமர்12:18
6.கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
ரோமர் 4:4
7.தேவவசனம்
ரோமர் 9:6
8. நியாயப்பிரமாணம்
ரோமர்7:12,13
9.நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு
ரோமர் 5:5
10.அன்பு
ரோமர் 13:10
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment