கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யார்?
2. நியாயப்பிரமாண புஸ்தகம் எதைவிட்டு பிரியாதிருப்பதாக என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார்?
3. பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்று யார் யாரிடம் கூறியது?
4. யோசுவா ஜனங்களின் அதிபதிகளிடம் எத்தனை நாட்களுக்குள் யோர்தானை கடந்து போவீர்கள் என்று கூறினான்?
5. கர்த்தர் மோசேயிடம் எந்த ஆற்றை கடந்து இஸ்ரேல் புத்திரருக்கு கொடுக்கும் தேசத்திற்கு போகும்படி கூறினார்?
6. உன்னோடு கூட இருப்பேன் என்று கர்த்தர் எந்தவிதத்தில் யோசுவாவிற்கு ஆனணயிட்டுக் கொடுத்தார்?
7. மோசே யோர்தானுக்கு இப்பறத்திலே சூரியன் உதிக்கும் திசைக்கு நேராக கொடுத்த தேசத்தை யாருக்கு சுதந்திரமாக கொடுத்தான்?
8. யார் கற்பித்த வார்த்தையை நினைத்துக் கொள்ளும்படி யோசுவா இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறினான்?
9. நியாப்பிரமாணத்தின்படி எழுதியிருக்கிறவைகளையெல்லாம் செய்ய கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் தியானித்தால் எதை வாய்க்கப் பண்ணுவதாக கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
10. யோசுவா எரிகோவிற்கு அனுப்பிய வேவுகாரரை மறைத்து ஒளித்து வைத்தது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.தேவனைத் தேடுகிறவன் இல்லை,
ரோமர் 3:11
2.கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
ரோமர் 3:5
3.அநேகர்
ரோமர் 5:15
4.மரணத்தின் சாயல் உயிர்த்தெழுதலின் சாயல்
ரோமர் 6:5 பாவமாம்சத்தின் சாயல்
ரோமர் 8:3
குமாரனுடைய சாயல்
ரோமர் 8:29
5.சரி
ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
ரோமர் 9:7
6.சரி
நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.
ரோமர் 4:15
7.தவறு
நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
ரோமர் 7:8
8.தவறு
தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்
ரோமர் 9:33
9.சரி
யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள்
ரோமர் 3:9
10.சரி
இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்.
ரோமர் 11:26
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment