Skip to main content

வேத வினா விடை - 173 (13.09.2020)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!

அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .

முக்கியமான குறிப்புகள்: 

*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.

*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30)

*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.

பகுதி : யோசுவா

1. எரிகோவின் சமனான வெளிகளுக்கு யுத்த சன்னத்தராய் எவ்வளவு பேர் கடந்து போனார்கள்?

2. யோர்தானின் தண்ணீர் தன்னிடத்திற்கு எப்போது திரும்பி முன் போல் அதன் கரையெங்கும் புரண்டது?

3. இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானில் இருந்து  எப்போது கரையேறினார்கள்?

4. இஸ்ரவேல் புத்திரருக்காக யோர்தானை வற்றிப்  போகப் பண்ணியதை கேட்ட எமோரியரின் சகல ராஜாக்களின் நிலவரம் எப்படி இருந்தது?

5. கில்காலிலே யோசுவா யாரை விருத்தசேதனம் செய்தான்?

6. கில்காலிலே நாட்டப்பட்ட கற்கள் எத்தனை?

7. இஸ்ரவேல் புத்திரர் நாளை இந்த கற்களை குறித்து தங்கள் பிதாக்களை கேட்கும்போது என்ன சொல்ல வேண்டும் என்று யோசுவா கூறினார்?

8. கர்த்தர் யோசுவாவை நோக்கி இன்று எகிப்தின் ____________ உங்கள்மேல் இராதபடிக்கு புரட்டிப் போட்டேன் என்றார்.

9. மன்னா எப்போது முதல் பெய்யாமல் ஒழிந்தது?

10. ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்கு சொன்னபடியே _______________ நின்றனர்


விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:


நேற்றைய சரியான விடைகள்:

1. எரிகோவின்  ராஜாவுக்கு. 2:2
2. இராகாப் என்னும் வேசியின் வீட்டில் : 2:1
3. இராகாப் வீட்டின் ஜன்னல் வழியாய் கயிற்றின் மூலம் இறக்கிவிடபட்டு, மலையில் போய் ஒளித்து கொண்டு, அங்கிருந்து இறங்கி ஆற்றை கடந்து, : 2:15,16,23
4. மூன்று நாட்கள் : 2:16
5. கர்த்தர் தேசத்தை எல்லாம்  நமது கையில் ஒப்புக்கொடுத்தார் : 2:24
6. அவள் வீட்டின் மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே 2:6
7. இரண்டாயிரம் முழங்க்தூரமான இடம் :3:4
8. கர்த்தரின் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரில் பட்டவுடன் ஜலம் குவியலாக நின்ற அதிசயம் :3:14 -17
9. அக்கரைக்கு கொண்டு போய் நாட்டினார்கள் 4:8,9
10. ஆசாரியர்களுக்கு :4:17


விடைகளை நீங்களாகவே  சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you. 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!




Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...