கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. யோசுவா கில்காலிலே யாரை எதிர்கொண்டான்?
2. இஸ்ரவேல் புத்திரர் எரிகோவை சூழ்ந்து முதல் 6 நாட்களில் எத்தனை தரம் சுற்ற வேண்டும் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
3. ஏழாம் நாளில் இஸ்ரவேல் புத்திரர் எரிகோவை எத்தனை தரம் சுற்றி வந்தனர்?
4. எரிகோவில் கொள்ளையடிக்கப்பட்ட பொன் வெள்ளி வெண்கலம் இரும்பு பாத்திரங்கள் என்ன செய்யப்பட்டது?
5. இஸ்ரவேல் ஜனங்கள் ஆர்ப்பரித்த போது எரிகோவின் அலங்கம் என்னவாயிற்று?
6. உன் கால்களில் இருக்கிற பாதரட்சை களை கழற்றிப் போடு நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்று யோசுவாவிடம் சொன்னது யார்?
7. எரிகோ பட்டணத்தில் தப்புவிக்க பட்டவர்கள் யார் யார்?
8. இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே எந்த தேதியில் பஸ்காவை ஆதரித்தனர்?
9. எரிகோ பட்டணத்தின் அலங்கங்கள் எப்போது இடிந்து விழும் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
10. கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக எத்தனை ஆசாரியர்கள் எக்காளங்களை பிடித்துக் கொண்டு போக வேண்டும் என்று யோசுவா கூறினான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.எறக்குறைய நாற்பதினாயிரம்பேர்
யோசுவா 4:13
2.கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது,
யோசுவா 4:18
3.முதல் மாதம் பத்தாம் தேதி
யோசுவா 4:19
4.இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.
யோசுவா 5:1
5.இஸ்ரவேல் புத்திரரை
யோசுவா 5:2
6.பன்னிரண்டு கற்கள்
யோசுவா 4:20
7. இஸ்ரவேல் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
பூமியில் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கு, நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,
உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கு செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறியக்கடவீர்கள் என்றான்.
யோசுவா 4:22--24
8.நிந்தையை
யோசுவா 5:9
9.தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே
யோசுவா 5:12
10.அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்
யோசுவா 4:12
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment