கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. எமோரியரின் ராஜாக்கள் எத்தனை பேர்?
2. எமோரியரின் ராஜாக்கள் எங்கே குடியிருந்தனர்?
3. இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களை பார்க்கிலும் ___________செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
4. இஸ்ரவேல் புத்திரருக்கும் , எமோரியருக்கும் நடந்த யுத்தத்தின் போது நடந்த அதிசயம் என்ன?
5. லாகீசுக்கு துனை செய்யும்படி வந்த ராஜா யார்?
6. ஆத்சோர் ராஜாவின் குதிரைகளுக்கும், இரதங்களுக்கும் என்ன நேரிட்டது?
7. ராஜ்யங்களுக்கெள்ளாம் தலைமையாயிருந்த எந்த பட்டணத்தின் ராஜாவை யோசுவா பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்?
8. யோசுவா அக்கினியினால் சுட்டெரித்த பட்டணம் எது ?
9. கிபியோனின் குடிகள் யார்?
10. இஸ்ரவேல் புத்திரருக்கு உதவிடும்படி கர்த்தரால் வந்த காரியம் என்னென்ன?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
யோசுவா 8:30
2.ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும்,
யோசுவா 8:26
3.கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.யோசுவா 8:33
4.1.எபிரோனின் ராஜா-- ஓகாமு 10:3
2.யர்மூத்தின் ராஜா-- பீராம் 10:3
3.லாகீசீன் ராஜா-- யப்பியா 10:3
4.எக்லோனின் ராஜா-- தெபீர்
யோசுவா 10:3
5.ஆத்சோரின் ராஜா-- யாபீன்
யோசுவா 11:1
6.ஆரோவேர் --
அர்னோன் ஆற்றங்கரை
யோசுவா 12:2
7.ரூபனின் குமாரன்-- போகன்
யோசுவா 15:6
8. ஓக்--இராட்சதன்
யோசுவா 12:4
5.ஏவியர்
யோசுவா 11:3
6.மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில்
யோசுவா 10:16
7.ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாதிபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து,
பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள். வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது போல நாடகமாடி
வஞ்சித்தனர்
யோசுவா 9:4,5,6
8.கர்த்தருடைய வாக்கைக் கேளாமல்
யோசுவா 9:14
9.இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்.
யோசுவா 9:23
10.கிபியோனின் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
யோசுவா 10:2
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment