கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக் கொண்ட தேசத்தை பங்கிட்டது யார்?
2. மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே எத்தனை கோத்திரத்துக்கு சுதந்திரம் கொடுத்தான்?
3. கில்காலிலே யாருடைய புத்திரர் யோசுவாவிடத்தில் வந்தார்கள்?
4. காதேஸ் பர்னேயாவில் யாரை குறித்து கர்த்தர் மோசேயிடம் பேசியதாக காலேப் கூறினான்?
5. தேசத்தை வேவு பார்க்க காலேப் காதேஸ்பர்னேயாவுக்கு சென்றபோது எத்தனை வயது உள்ளவனாக இருந்தான்?
6. கர்த்தர் என்னோடு இருப்பாரானால் கர்த்தர் சொன்னபடியே யாரை துரத்தி விடுவதாக யோசுவாவிடம் கூறினான்?
7. அப்பொழுது யோசுவா எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்பை ஆசீர்வதித்து ______________ அவனுக்கு சுதந்திரமாக கொடுத்தார்.
8. ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாய் இருந்தவன் யார்?
9. சீகோனின் அதிபதியாயிருந்த மீதியானின் பிரபுக்கள் எத்தனை பேர்?
10. மீதியானிய பிரபுக்களிலிருந்து வேறுபடுபவர் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.யோசுவா13:6
2.தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார்.
யோசுவா 13:7
3.கெசூரியரையும் மாகாத்தியரையும்
யோசுவா 13:13
4.கர்த்தருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.
யோசுவா13:14
5.குறிசொல்லுதல்
யோசுவா13:22
6.காத் புத்திரரின் கோத்திரத்துக்கு
யோசுவா 13:24, 27
7.அறுபது
யோசுவா 13:30
8.மோசே
யோசுவா 13:33
9.காத் புத்திரர்
யோசுவா 13:28
10.யோசேப்பின் புத்திரர்
யோசுவா 14:4
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment