கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. செலோப்பியத்துக்கு கிலேயாத் என்ன உறவு முறையானான்?
2. கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல் மனாசேக்கு சீட்டிலே விழுந்தது எத்தனை பங்குகள்?
3. தப்புவாவின் நிலம் யாருக்கு கிடைத்தது?
4. இருப்பு ரதங்களை வைத்திருந்த குடிகள் யார்?
5. நோவாள் யாருடைய குமாரத்தி?
6. ஏழு கோத்திரங்களும், தேசங்களும் எப்படி பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று யோசுவா கூறினான்?
7. கர்த்தருடைய ஆசாரிய பட்டயம் யாருடைய சுதந்திரம்?
8. யூதா புத்திரரின் பட்டணம் எது?
9. தேசத்தை ஏழு பங்காக பிரித்ததில் பென்யமீன் கோத்திரத்திற்கு எத்தனை பட்டணங்கள் கிடைத்தது?
10. இரண்டாம் சீட்டு எந்த கோத்திரத்துக்கு விழுந்தது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.உத்தமமாய்
யோசுவா 14:8
2.எபிரோன்
யோசுவா 14:15
3.கிணறு
யோசுவா 15:7
4.கீரியாத்செப்பேர்
யோசுவா 15:15
5.என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன்
யோசுவா 15:16
6.மூன்று குமாரர்
யோசுவா 15:14
7.இருபத்தொன்பது
யோசுவா 15:21-32
8.எபூசியர்
யோசுவா 15:63
9.எப்பிராயீம் புத்திரர்
யோசுவா16:7
10.கானானியர்
யோசுவா 16:10
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment