கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
1. இஸ்ரவேலின் தாயாக எழும்பினவள் யார்?
2. அக்சாள் தன் தகப்பனிடம் கேட்ட ஆசீர்வாதம் என்ன?
3. எழுதுகோலை பிடிக்கிறவர்கள் எங்கிருந்து இறங்கி வந்தார்கள்?
4. கானானிய ராஜா யாபீனின் சேனாபதி யார்?
5. யாருடைய பிரிவினையால் மனோ விசாரங்கள் மிகுதி?
6. _________ ____________ போர்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் துணிந்து நின்றார்கள்?
7. அதற்கு ________, நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால் போமாட்டேன் என்றான்.
8. கர்த்தரின் தூதனானவர் வந்து யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருந்து ஒரு _____________________ கீழ் உட்கார்ந்தார்.
9. அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு ________ என்று பெயரிட்டான்.
10. கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்கு தப்புவிப்பதற்காக ________ சமீபமாய் போரடித்தான்.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
(விரைவில் பதிவிடப்படும் )
நேற்றைய சரியான விடைகள்:
1.யோசுவா --110வயதில் மரித்தவன்
நியாயாதிபதிகள் 2:8
2.அக்சாள்-- ஒத்னியேல்
நியாயாதிபதிகள் 1:13
3.எக்லோன் -- மோவாபின் ராஜா
நியாயாதிபதிகள் 3:12
4. தெபொராள் -- லபிதோத்
நியாயாதிபதிகள் 4:4
5.யாகேல் --
ஏபேர்
நியாயாதிபதிகள் 4:21
6.யாபீன் -- கானானிய ராஜா
நியாயாதிபதிகள் 4:2
7.யோவாஸ் -- கிபியோனின் தந்தை
நியாயாதிபதிகள் 6:11
8.சம்கார் -- பெலிஸ்தரில் 600 (அறுநூறு)பேரை ஒரு தாற்றுக்கோலால் முறியடித்தவன்
நியாயாதிபதிகள் 3:31
9.ஏகூத் -- இடதுகைப் பழக்கமுடையவன்நியாயாதிபதிகள் 3:15
10.சிசெரா --900 (தொளாயிரம்) இருப்புரதங்கள்
நியாயாதிபதிகள் 4:13
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment