கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
பொருத்துக.
1. பெலிஸ்தியருக்கு பொல்லாப்பு செய்தாலும் என்மேல் குற்றம் இல்லை என்று சொன்னவன் யார்?
2. தகப்பன் வீட்டில் சுதந்திரம் இல்லாதவன் யார்?
3. அம்மோனியரின் தெய்வம் எது?
4. 30 குமாரர், 30 குமாரத்திகளைக் கொண்டவன் யார்?
5. சிம்சோன் கழுதையின் தாடை எலும்பால் 1000 பேரை கொன்றது எங்கே?
பொருத்துக. ( நியாயம் விசாரித்தவர் - எத்தனை வருடங்கள் )
6. சிம்சோன் - அ) 6 வருடம்
7. ஏலோன் - ஆ) 7 வருடம்
8. இப்சான் - இ) 8 வருடம்
9. அப்தோன் - ஈ) 10 வருடம்
10. யெப்தா - உ) 20 வருடம்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
Quiz-189
நியாயாதிபதிகள்
பொருத்துக பதில்கள்
1.அபிமெலேக்கு -- வேலைக்காரியின் மகன்
நியாயாதிபதிகள் 9:17
2.தோலா --இசக்கார் கோத்திரத்தான்
நியாயாதிபதிகள் 10:1
3.யெப்தா -- பரஸ்திரீயின் மகன்
நியாயாதிபதிகள் 11:1
4.சீகோன் -- எமோரியரின் ராஜா
நியாயாதிபதிகள் 11:19
5.மனோவா -- தாண் நியாயாதிபதிகள் 13:2
6.சிம்சோன் -- தெலீலாள்
நியாயாதிபதிகள் 16:6
7.அப்தோன் -- நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகள்
நியாயாதிபதிகள் 12:13-14
8.யாவீர் --முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர்
நியாயாதிபதிகள் 10:3-4
9.திம்னாத் -- பெலிஸ்தரின் குமாரத்தி
நியாயாதிபதிகள் 14:1
10.எந்நக்கோரி -- லேகியின் பள்ளம்
நியாயாதிபதிகள் 15:19
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment