கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. பரலோக ராஜ்யத்தின் திறவுக்கோல்களை குறித்து சொன்னது யார்?
2. தாவீதின் திறவுக்கோல்களை உடையவரை குறித்து சொன்னது யார்?
3. மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனாக இருந்தான் என்று எங்கு வாசிக்கிறோம்?
4. மெல்கிசேதேக்கு உன்னதமான தேவனுடைய ஆசாரியனாக இருந்த சாலேமின் ராஜா என்று எங்கு வாசிக்கிறோம்?
5. எது ஜீவ வழி என்று ஞானி கூறியுள்ளார்?
6. எது ஜீவ ஊற்று என்று ஞானி கூறியுள்ளார்?
7. எதை நேராக்க கூடாது?
8. எதை எண்ணி முடியாது?
9. பிள்ளையை தடுத்தது யார்?
10. மழையை தடுத்தது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Comments
Post a Comment