கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : நியாயாதிபதிகள்
1. மரங்கள் எல்லாம் _________________ பார்த்து நீ வந்து எங்களுக்கு ராஜாவாக இரு என்றன.
2. அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு எந்திர கல்லின் துண்டை ____________ தலையின் மேல் போட்டாள்.
3. ________________ தன் காரியங்களை எல்லாம் மிஸ்பாவில் கர்த்தருடைய சந்நிதியில் சொன்னான்.
4. யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் ______________ தேசத்தில் குடியிருந்தான்.
5. யெப்தா அம்மோன் புத்திரரின் மேல் யுத்தம் பண்ணி ______________ பிடித்தான்.
6. கர்த்தர் இஸ்ரவேலரை _____________ வருஷமளவும் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
7. சிம்சோன் தன் பெண்சாதியை காண ________________ எடுத்துச் சென்றான்.
8. விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க சிம்சோன் _____________ அவகாசம் கொடுத்தான்.
9. கீலேயாத் மூப்பர் ________________ புத்திரரோடே யுத்தம் பண்ண யெப்தாவை அழைத்தார்கள்.
10. பின்பு சிம்சோன் _____________ போய் அங்கே ஒரு வேசியை கண்டு அவளிடத்தில் போனான்.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.சிம்சோன்
நியாயாதிபதிகள் 15:3
2.யெப்தா
நியாயாதிபதிகள் 11:2
3.அம்மோன் புத்திரரின் தேவன் மில்கோம்
1 இராஜாக்கள் 11:33
நியாயாதிபதிகள்10:6
4.இப்சான்
நியாயாதிபதிகள் 12:8-9
5.லேகி
நியாயாதிபதிகள் 15:14-15
பொருத்துக. ( நியாயம் விசாரித்தவர் - எத்தனை வருடங்கள் )
6.சிம்சோன் --20 (இருபது) வருஷம்
நியாயாதிபதிகள் 15:16, 20
7.ஏலோன் --10 (பத்து) வருஷம்
நியாயாதிபதிகள் 12:11
8.இப்சான் -- 7 (ஏழு) வருஷம்
நியாயாதிபதிகள் 12:8-9
9.அப்தோன் -- 8 (எட்டு) வருஷம்
நியாயாதிபதிகள் 12:13-14
10.யெப்தா -- 6 (ஆறு ) வருஷம்
நியாயாதிபதிகள் 12:7
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment