கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. மூன்று விலா எலும்புகளை தரிசனத்தில் கண்டது யார்?
2. மூன்று வெள்ளைக்கூடைகளை சொப்பனத்தில் கண்டது யார்?
3. பூரண சற்குணத்தின் கட்டு எது?
4. பூரண அன்பு நீக்குவது எது?
5. சமாரியருக்கு முதன்முதலில் பிரசங்கம் செய்தது யார்?
6. புறஜாதியாருக்கும் முதன்முதலில் பிரசங்கம் செய்த அப்போஸ்தலன் யார்?
7. இராஜாக்களுக்குத் தகுதியில்லாதது எது?
8. பிரபுக்களுக்குத் தகுதியில்லாதது எது?
9. மதுபானம் பண்ணினால் நியாயபிரமாணத்தை மறப்பது யார்?
10. மதுபானத்தால் நியாயத்தை புரட்டுவது யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.தாழ்மை -நீதி 15:33
2.சோம்பல் - நீதி 19:15
3.தாவீது - சங் 118:27
4.எலியா - 1 இரா 18:35
5.இயேசு - யோவான் 2:15
6.போர்ச்சேவகர் - மத் 27:29
7. ஆரோன் - எபி 7:11
8.இயேசு - எபி 6:20
9. சுயம்பாகிகளின் தலைவன் - ஆதி 40:17
10.பானபாத்திரக்காரன் - ஆதி 40:10
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment