கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
இன்று நமது வேத வினா விடை போட்டியின் 200வது நாள். இதனை நடத்த எங்களுக்கு கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி தோத்திரம். அதுமட்டுமின்றி,
ஒவ்வொரு நாளும் உற்சாகமாய் கலந்து வருகின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துகளும். தொடர்ந்து இந்த ஊழியத்திற்காக ஜெபியுங்கள். கடவுள் தாமே உங்களையும், உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக🙏🏻
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகம்ம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. விதிகளையும் கற்பனைகளையும் நியமங்களையும் பிரமாணங்களையும் கை கொண்டவர் யார்?
2. ஈசாக்கு எந்த தேசத்தில் குடியிருந்தான்?
3. அபிமெலேக்கு யாருடைய ராஜாவாய் இருந்தான்?
4. யாருடைய ஆசீர்வாதத்தால் அதே வருஷத்தில் நூறுமடங்கு பயன் கிடைத்தது?
5. ஆபிரகாமின் துரவுகள் எங்கே இருந்தன?
6. ஏசா எத்தனை முறை யாக்கோபுடன் மோசம் போனான்?
7. அபிமெலேக்குவின் சேனாதிபதியின் பெயர் என்ன?
8. ரெபேக்காள் எத்தனை வெள்ளாட்டு குட்டிகளை கொண்டு வா என்றாள்?
9. ஏசாவின் வஸ்திரம் என்ன வாசனை தந்தது?
10. லாபம் இருக்கும் இடம் எது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. மதுபானம் - நீதி 31:6
2. திராட்சரசம்- நீதி 31:6
3. குணசாலியான ஸ்திரீ - நீதி 31:20
4. குணசாலியான ஸ்திரீ - நீதி 31:20
5. ஆகாரம் - நீதி 28:19
6. வறுமை - நீதி 28:19
7. மனுஷர் - நீதி 28:28
8. நீதிமான்கள் - நீதி 28:28
9. உக்கிரம் - நீதி 27:4
10. கோபம் - நீதி 27:4
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment