கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. யாக்கோபு தன் சம்பளமாக எப்படிப்பட்ட செம்மறியாடுகள் கேட்டான்?
2. ராகேல் தன் தந்தையிடமிருந்து எதை திருடினாள்?
3. யாக்கோபு ஓடிப்போனது லாபானுக்கு எத்தனையாவது நாளில் தெரியவந்தது ?
4. யாக்கோபு தனக்கு உண்டானவைகளை எடுத்துக் கொண்டு எங்கே ஓடிப்போனான்?
5. தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி - லாபான் சூட்டிய பெயர் ____________________
6. கோலும் கையுமாய் வந்த யாக்கோபு எதை உடையவன் ஆனான்?
7. விடியும் வரை யாக்கோபுடன் போராடியது யார்?
8. யாக்கோபின் மாற்று பெயர் என்ன?
9. இஸ்ரவேல் புத்திரர் இன்றுவரை எதை புசிப்பதில்லை?
10. யாக்கோபு ஏசாவை எதிர்க்கொண்டு போகையில் யாரை இடையில் நிறுத்தினான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.மூன்று
ஆதியாகமம் 29:2
2.ஆரான் ஊரார்
ஆதியாகமம் 29:4
3.லேயாள்
ஆதியாகமம் 29:16
4.ஏழு வருஷம்
ஆதியாகமம் 29:18
5.சில்பாள்
ஆதியாகமம் 29:24
6.பில்காள்
ஆதியாகமம் 29:29
7.ரூபன்
ஆதியாகமம் 29:32
8.லேயாள்
ஆதியாகமம் 29:32-33
9.யூதா
ஆதியாகமம் 29:35
10.தீனாள்
ஆதியாகமம் 30:21
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment