கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. யாக்கோபு எத்தனை முறை தரைமட்டும் ஏசாவை வணங்கினான்?
2. யாக்கோபு ஏசா முகம் யாருடையதாக காணப்பட்டது?
3. யாக்கோபே வீடு கட்டிய அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயரிட்டான்?
4. யாக்கோபு எத்தனை வெள்ளிக்காசு இடத்தை வாங்கினான்?
5. யாக்கோபு யாரிடம் இடத்தை வாங்கினான்
6. யார் தீனாவை தீட்டப்படுத்தியது?
7. யாக்கோபின் குமாரர் கூறிய வஞ்சகமான மறுமொழி என்ன?
8. ஏமோர் ஆண் மக்களை பட்டயத்தால் சந்தித்தவர்கள் யார்?
9. யாக்கோபு கர்வாலி மரத்தடியில் எதை புதைத்தார்?
10. ரெபேக்காளின் தாதியின் பெயர் என்ன?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளும்
ஆதியாகமம் 30:32
2.தன் தகப்பனுடைய சுரூபங்களை
ஆதியாகமம் 31:19
3.மூன்றாவது் நாள்
ஆதியாகமம் 31:22
4.கீலேயாத் மலை
ஆதியாகமம் 31:21
5.கலயெத்
ஆதியாகமம் 31:48
6.இரண்டு பரிவாரங்களை
ஆதியாகமம் 32:10
7.ஒரு புருஷன்(தேவன்)
ஆதியாகமம் 32:24-28
8.இஸ்ரவேல்
ஆதியாகமம் 32:28
9.தொடைச்சந்து நரம்பை
ஆதியாகமம் 32:32
10.லேயாளையும் அவள் பிள்ளைகளையும்
ஆதியாகமம் 33:2
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment