கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1)முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்..... என்று யாருக்கு சொல்லப்பட்டது?
A)மோசே
B)ஏசாயா
C)தானியேல்
D)யோவான்
2)சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற எதற்கு ஒப்பாக இருக்கிறான்?
A)கலங்கும் தண்ணீருக்கு
B)கப்பலுக்கு
C)மரத்திற்கு
D)கடலின் அலைக்கு
3) அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றவன் யார்?
A)ஆபிரகாம்
B)ஏனோக்கு
C)ஆதாம்
D)மோசே
4)ராஜாவாகிய சவுலின் தகப்பன் யார்?
A)கீஸ்
B)ஆதாம்
C)ஈசாய்
D)அம்மினதாப்
5)எது இல்லாமல் கர்த்தரைத் தரிசிக்க முடியாது?
A)அன்பில்லாமல்
B)ஆவியில்லாமல்
C)மனந்திரும்புதல் இல்லாமல்
D)பரிசுத்தம் இல்லாமல்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:

Comments
Post a Comment