கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
1) மீதியானியரின் சேனையை வேவு பார்க்கச் சென்றவர்கள் ____ , __.
2) 'ஜீவ கிரீடத்தை உனக்கு தருவேன்' என்று வாக்குத்தத்தம் பெற்ற சபை ____.
3) இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? எனக் கேட்டவன்____.
4) ஆமோஸ் தீர்க்கதரிசியின் தொழில்_____.
5) இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் , எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும். ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும் என் எழுதப்பட்ட புத்தகம்____.
நேற்றைய சரியான விடைகள்:
1)கார்மேல் பர்வதம் (1 இராஜாக்கள்.18:19-40)
2)பாபிலோன் (ஏசாயா.39:1,2)
3)ஓப்னி , பினெகாஸ் (1 சாமுவேல்.1:3)
4) ஜெபமோ (நீதிமொழிகள்.15:8)
5)127 (ஆதியாகமம்.23:1)
Comments
Post a Comment