கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
1)மோசேயின் சகோதரனும், சகோதரியும்__________ , __________________.
2) நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். இதைக் கூறியவர்______________.
3) அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ________________ புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
4)சேனைகளுக்கெல்லாம் கண்மயக்கம் உண்டாகும்படி ஜெபித்தவர்___________.
5)பார்வோன் யோசேப்புக்கு இட்ட மறுபெயர்_____________.
நேற்றைய சரியான விடைகள்:
1)பேதுரு. (லூக்கா.22:32)
2)எப்ரோன். (2 சாமுவேல்.2:1)
3)யூதேயா. (மத்தேயு.3:1)
4)ஏகூத். (நியாயாதிபதிகள்.3:20 & 21)
5)சீமோனிடம். (அப்போஸ்தலர்.8:22)
Comments
Post a Comment