கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) நாம் தேவனைத் கண்டோம், சாகவே சாவோம் எனக் கூறியவன் _______________.
2)இயேசு கிறிஸ்து மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய் _________________ பிரசங்கித்தார்.
3)சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் _____________________.
4)நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார் என்று கூறியது __________________.
5)அவர் நிமித்தம் இன்றைக்கு சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று கூறியது _____________.
நேற்றைய சரியான விடைகள்:
1)அறுநூறு (ஆதியாகமம்.7:6)
2)யோசேப்பு (யோவான்.19:38)
3)பெயல்செபூலைக் (மத்தேயு.12:24).
4)ஏதோம் (ஆதியாகமம்.25:30)
5)கனம்பண்ணு (நீதிமொழிகள்.3:9)
Comments
Post a Comment