கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)யோபு குடியிருந்த தேசம்______________.
2)ஆரோக்கியமுள்ள நாவு ________________ ;
நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
3)படுத்த படுக்கையாக இருந்த எந்த இராஜாவுக்கு எத்தனை வஸ்திரங்களாலும் மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை?
______________________.
4) கர்த்தர் தாவீதினிமித்தமாக அனுப்பியிருந்த சங்கரிக்கிற தூதனை தடுத்து நிறுத்தியபோது, தூதன் யாருடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான்?
____________________.
5)தன் கலசத்திலுள்ளதை ஐபிராத்து என்னும் நதியின் மேல் ஊற்றிய தூதன் யார்?
______________________.
நேற்றைய சரியான விடைகள்:
1)தாரை (மத்தேயு.6:2)
2)அகித்தோப்பேல்
(2 சாமுவேல்.15:12)
3)தோமா (யோவான்.11:16 ; 20:24 ; 21:2)
4)உசியா (2 நாளாகமம்.26:21)
5)கில்போவா
(1 நாளாகமம்.10:1-8 ;
1 சாமுவேல்.31:1-8)
Comments
Post a Comment