கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)ஸ்தேவானை நகரத்துக்குப் புறம்பே தள்ளி கல்லெறிந்தவர்கள், சாட்சியாக தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி யாருடைய பாதத்தினருகே வைத்தார்கள்?
______________________.
2)இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு, என்று எந்த சபைக்கு கூறப்பட்டது?
_______________________.
3)சவுல் எனப்பட்ட பவுல் எந்தப் பட்டணத்தான்?
______________________.
4)யூதாவிலும், எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேலின் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னவர்கள்
_____________________ , ______________________.
5)வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் _______________________.
நேற்றைய சரியான விடைகள்:
1) சமாரியா (யோவான்.4:5)
2)மனாசே
(2 இராஜாக்கள்.21:3; 2 நாளாகமம்.33:3)
3)மாராள் (ரூத்.1:20)
4) யுஸ்து (கொலோசெயர்.4:11)
5)எல்க்கானா (1 சாமுவேல்.1:1)
Comments
Post a Comment