கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)இக்கபோத் என்பதன் அர்த்தம் _______________.
2)இஸ்ரவேலின் மேல் ராஜ்யபாரம் பண்ணின பெண் அரசி ______________________.
3)சாவுக்கேதுவான விஷம் நிறைந்தது _______________________.
4) கிறிஸ்து குமாரனாயிருந்தும் பட்ட பாடுகளினாலே எதைக் கற்றுக்கொண்டார்?
______________________.
5)தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே என்று இயேசு எதைக் குறித்து சொல்லுகிறார்?
________________________.
நேற்றைய சரியான விடைகள்:
1)சவுலுடைய பாதத்தினருகே (அப்போஸ்தலர்.7:58)
2)பிலதெல்பியா (வெளிப்படுத்தின விசேஷம்.3:11)
3)தர்சு
(அப்போஸ்தலர்.9:11)
4)ஆகாய் , சகரியா (எஸ்றா.5:1)
5)சிந்தனைசெய் (பிரசங்கி.7:14)
Comments
Post a Comment