கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) கர்த்தருடைய தாசனாகிய ____________________ மரிக்கும் போதும் கண்கள் இருளடையவில்லை.
2) பலவிதமான அந்நிய _______________________ அலைப்புண்டு திரியாதிருங்கள்.
3)நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள், அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று, கர்த்தர் யாரைப் பார்த்து சொன்னார்?
_____________________.
4)பலத்த பராக்கிரமசாலியாயிருந்த பரஸ்திரீயின் குமாரன் _______________.
5)யாருடைய கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டது?
____________________.
நேற்றைய சரியான விடைகள்:
1) இக்கபோத்
(1 சாமுவேல்.4:21)
2)அத்தாலியாள்
(2 இராஜாக்கள்.11:3 ;
2 நாளாகமம்.22:12)
3)நாவு (யாக்கோபு.3:8)
4)கீழ்படிதலை (எபிரெயர்.5:8)
5)எருசலேம் (மத்தேயு.23:37 ; லூக்கா.13:34)
Comments
Post a Comment