கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)பொவனெர்கேஸ் என்பதன் அர்த்தம் _______________________.
2)மல்கியா மக்களைப் பார்த்து எதில் அவர்கள் தேவனை வஞ்சித்ததாகக் கூறுகிறான்?
________________________.
3) கர்த்தருடைய பெட்டியை பெலிஸ்தர் எந்தக் கோவிலில் வைத்தார்கள்?
_______________________.
4) இரவில் இயேசுவைச் சந்திக்க வந்த மனிதன்
_______________________.
5)எப்பொழுது சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்?
_______________________.
நேற்றைய விடைகள்
1)ஜீவக் கிரீடத்தை (யாக்கோபு.1:12)
2) தாவீது
(1 சாமுவேல்.21:3-6)
3)மக்கெதோனியா சபையினர்
(2 கொரிந்தியர்.8:2)
4)அறிவை இறைக்கும் (நீதிமொழிகள்.15:7)
5) சீயோன் குமாரத்தியின் (புலம்பல்.1:6)
Comments
Post a Comment