கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) சவுலின் கட்டளையால் எண்பத்தைந்து ஆசாரியர்களை வெட்டிக் கொன்றுபோட்ட மனிதன் பெயர் _______________________.
2) தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் ______________________
நியமித்தார்.
3)வேட்டையில் வல்லவன் யார்?
______________________.
4) மோசேயின் பெற்றோர் பெயர் என்ன? _________________ & _____________________.
5) கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று சொன்னது யார்?
_______________________.
நேற்றைய விடைகள்:
1)ஆசாரியனாகிய அகிமெலேக்கு
(1 சாமுவேல். 21:1)
2)ஸ்திரப்படுத்தி
(2 தெசலோனிக்கேயர்.3:3)
3)தூதர்களினிமித்தம்
(1 கொரிந்தியர்.11:10)
4)ஏபால் மலை (உபாகமம்.11:29)
5)யோசுவா
(யோசுவா.5:13)
Comments
Post a Comment