கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) இப்பொழுது நான் தாகத்தினால் செத்து விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையில் விழவேண்டுமோ? என்று கேட்டது யார்?
________________________.
2)அகாயா நாட்டில் யூதர்கள் பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோனபோது அந்த நாட்டில் அதிபதியாக இருந்தவன் யார்?
______________________.
3)பிதாவே நீர் எனக்குச் செவிகொடுக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த ஜெபத்தை இயேசு எப்போது செய்தார்?
________________________.
4)இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?
________________________.
5)ஜெபிக்கப்போதிக்கும்படி யாரை உதாரணம் காட்டி சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்?
________________________.
நேற்றைய விடைகள்:
1)தோவேக்கு
(1 சாமுவேல்.22:18)
2)இரட்சிப்படைவதற்கென்று
(1 தெசலோனிக்கேயர்.5:9)
3)ஏசா (ஆதியாகமம்.25:27)
4)அம்ராம், யோகெபேத் (யாத்திராகமம்.6:20)
5)ஏரேமியா
(ஏரேமியா.48:10)
Comments
Post a Comment