கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)எரேமியாவின் வாய் பேச பேச அதை எழுதியது யார்?
________.
2)உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிப்பவர்கள் _________.
3)சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகனின் பெயர் என்ன?
________.
4) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசித்து இரட்சிக்கப்படுகிறவர்கள் என்ன செய்வார்கள்?
________.
5)மீகா எந்த ஊரைச் சேர்ந்தவர்?
________.
நேற்றைய விடைகள்:
1)சிம்சோன் (நியாயாதிபதிகள்.15:18)
2)கல்லியோன் (அப்போஸ்தலர்.18:12)
3)லாசருவை உயிரோடு எழுப்பியபோது (யோவான்.11:41)
4)எலியா
(1 இராஜாக்கள்.18:17)
5) யோவான்ஸ்நானகன்
(லூக்கா.11:1)
Comments
Post a Comment