கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. இதைக் கூறியது ____________________.
2) சீட்டு போட்டு அப்போஸ்தலனாக தெரிவு செய்யப்பட்டவர் யார்?
____________________.
3) எது இல்லாமல் கர்த்தரைத் தரிசிக்க முடியாது?
____________________.
4) மரணத்தின் கூர் பாவம்; பாவத்தின் பெலன் ___________________.
5)மாரா என்பதன் அர்த்தம் ___________________.
நேற்றைய விடைகள்:
1)இரக்கம் (யாக்கோபு.2:13)
2)தெயோப்பிலுவுக்கு (அப்போஸ்தலர்.1:1)
3)தோமா (யோவான்.11:6 ; 20:24 ; 21:2)
4)தீமோத்தேயு
(1 தீமோத்தேயு.1:2)
5) கிறிஸ்து (யோவான்.1:41)
Comments
Post a Comment