கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தை கிருபையாய் காணச் செய்த கர்த்தருக்கு நன்றி.
ஜூலை மாத வாக்குத்தத்தம்:
"ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். "- சங்கீதம் 37:4
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையானவர் யார்?
____________________.
2) யோவான் தூதனிடத்திலிருந்து சிறு புஸ்தகத்தை வாங்கி புசித்த போது எப்படி இருந்தது?
____________________ & _____________________.
3)யெரொபெயாம் இரண்டு பொன்கன்றுக்குட்டிகளை உண்டாக்கி எந்தெந்த இடங்களில் ஸ்தாபித்தான்?
___________________ & ____________________.
4)பவுலோடு கூட காவலில் வைக்கப்பட்டவன் யார்?
____________________.
5)பெயேரின் குமாரன் யார்?
_____________________.
நேற்றைய விடைகள்:
1)பாதரட்சை (எபேசியர்.6:15)
2)தாமதமாயும் (யாக்கோபு.1:19)
3)பொர்க்கியுபெஸ்து (அப்போஸ்தலர்.24:27)
4)அத்தாலியாள் (2 இராஜாக்கள்.11:14)
5)பட்சிக்கிற (எபிரேயர்.12:29)
Comments
Post a Comment