கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று இயேசு யாரைப் பார்த்து கூறுகிறார்?
____________________.
2)சிம்சோன் கழுதையின் தாடை எலும்பினால் 1000 பேரைக் கொன்ற இடத்திற்கு என்ன பேரிட்டான்?
_________________
3)நேபுகாத்நேச்சார் பொற்சிலையைப் பண்ணுவித்து நிறுத்தின இடம் எது?
____________________.
4) நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய ____________________ முடிவில்லை.
5)ஆமோத்சின் குமாரன் யார்?
____________________.
நேற்றைய விடைகள்:
1)ஏனோக்கு
(யூதா.1:4)
2)மதுரமாயும், கசப்பமாயிருந்தது. (வெளிப்படுத்தின விசேஷம்.10:10)
3)பெத்தேலிலும் , தாணிலும் (1 இராஜாக்கள்.12:28 & 29)
4)எப்பாப்பிரா (பிலேமோன்.1:23)
5)ஓசியா (ஓசியா.1:1)
Comments
Post a Comment